×

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியின் அண்ணன் மீது தாக்குதல்

பண்ருட்டி, மார்ச் 11: பண்ருட்டி அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியின் அண்ணனை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராதாகிருஷ்ணன் (32). இவரது மனைவி சோனியா (28). ராதாகிருஷ்ணன் சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இதுபற்றி அறிந்த சோனியாவின் அண்ணன் ரஜினிகாந்த் ராதாகிருஷ்ணனிடம் சென்று, ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று தட்டிக்கேட்டுள்ளார்.இதில் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், அவரது உறவினர்கள் சதாசிவம், சந்தோஷ், ஆகாஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரஜினிகாந்தை அசிங்கமாக திட்டி இரும்பு கம்பியால் சரமாரி தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரஜினிகாந்த் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, ராதாகிருஷ்ணன் (32), சதாசிவம் (22), சந்தோஷ் (18) ஆகிய மூவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆகாஷை தேடி வருகின்றனர்

Tags : Attacks ,
× RELATED கடந்த 7 நாட்களில் மட்டும் 11...