×

வண்ண பொடிகளை தூவி விழுப்புரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

விழுப்புரம், மார்ச் 11: விழுப்புரத்தில் வண்ணப்பொடிகளை பூசி வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.இந்தியாவின் வடமாநிலங்களில் முக்கிய விழாவாக ஹோலிபண்டிகை கொண்டாடுகின்றனர். அதன்படி, நேற்றையதினம் ஹோலிபண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விழுப்புரத்தில், வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான எம்ஜிரோடு, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் தூவிக்கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.நட்பை வளர்த்துக் கொள்ளும் வகையில் நண்பர்கள், குடும்பத்தினர், என அனைவரும் பாரபட்சம் பாராமல் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். விழுப்புரம் காமராஜ் சாலையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியுடன் கொண்டாடின

Tags : Holi festival ,Villupuram ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!