×

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 11:  திருவெண்ணெய்நல்லூர் வட்டார வள மையத்தில் மாற்றுதிறனாளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் வட்டார வள மையத்தில் நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.மேற்பார்வையாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர்கள் உமாமகேஷ்வரி, சுகன்யா, கோசலா, தீபா, ராஜேஷ்வரி, சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பயிற்றுனர் கிருஷ்ணபிரியா வரவேற்றார்.வட்டார கல்வி அலுவலர்கள் மத்தேயு, பானுமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினர்.  திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், பெரியசெவலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செவித்திறன் கருவி, சக்கர நாற்காலி, நகர்த்தும் வண்டி, சிபி நாற்காலி வழங்கப்பட்டது. அலுவலர்கள் ஜெயசீலன், எழிலரசி. தீபா, பூங்கொடி, வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர். துளசிராமன் நன்றி கூறினார்.

Tags : Ceremony ,
× RELATED புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர்...