விழுப்புரத்தில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் ஊர்வலம்

விழுப்புரம், மார்ச் 11: விழுப்புரத்தில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்களின் ஊர்வலத்தை முன்னாள் சேர்மன் ஜனகராஜ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு  மருத்துவர் சமுதாய அகத்தியர் இசை பேரவை மற்றும் விழுப்புரம் மாவட்ட நாதஸ்வர  தவில் இசைக்கலைஞர்களின் இரண்டாம் ஆண்டு இசைவிழா விழுப்புரத்தில் நடந்தது.  திருவிக வீதி ஆஞ்சநேயர் கோயிலில் முத்துசுவாமி, தியாகப்பிரம்மம், சியாமா  சாஸ்திரிகள் ஆகியோரின் திருவுருவப்படத்துக்கு ஆராதனை சிறப்புவழிபாடு  செய்து மங்கள இசை 101 நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்களால் இசைத்த வண்ணம் ஊர்வலம்  புறப்பட்டது. இதனை விழுப்புரம் முன்னாள் நகரமன்றத் தலைவரும், திமுக தலைமை  செயற்குழு உறுப்பினருமான ஜனகராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். டிஎஸ்பி  சங்கர் முன்னிலை வகித்தார். ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம்  காந்திசிலை, எம்ஜிரோடு, காமராஜர் தெருவழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.  தொடர்ந்து சிறப்பு இசைநிகழ்ச்சிகள் நடந்தது. வியாசர்பாடி கோதண்டராமனின்  சிறப்பு நாதஸ்வரம், செங்கல்பட்டு முத்துக்கிருஷ்ணன், காஞ்சிபுரம் பழனி  ஆகியோரின் சிறப்பு நாதஸ்வரமும், வெளியம்பாக்கம் கணபதி, ரவிக்குமார்  ஆகியோரின் சிறப்பு தவில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாதஸ்வரத்தில்  சிறந்து விளங்கிய தெய்வநாயகம், செல்வராசு, வேணுகோபால், தவில் ராமசாமி,  சந்தானம், சங்கு ஆகிய கலைஞர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  நிர்வாகிகள் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: