×

தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதி கோரி தூத்துக்குடியில் 6வது நாளாக விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்

தூத்துக்குடி, மார்ச் 11: தங்கு கடல் மீன்பிடித்தலை அனுமதிக்கக் கோரி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 6வது நாளாக நேற்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் அவர்களது விசைப்படகுகள்  மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.  தூத்துக்குடி  மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தற்போது  மீன்பாடு குறைந்து வருவதால், கடலில் தங்கி மீன்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை  மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.தினமும் காலை 5 மணிக்கு கடலுக்கு செல்லும்  மீனவர்கள் இரவு 9 மணி வரை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தாலும் போதுமான அளவு  மீன்கள் கிடைப்பதில்லை.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில்  விசைப்படகுகளுக்கு மீன்பிடித்தலுக்கான செலவினங்களும் அதிகரித்துள்ள  நிலையில் குறைந்த மீன்கள் கிடைப்பதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டும்  வருகிறது. இதனால் தங்கு கடல் மீன்பிடித்தலுக்காக மீனவர்களை அனுமதிக்க  வேண்டும் என்று கோரி விசைப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு  மீன்பிடிக்க செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை  நிறுத்தியிருந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு  முன்பு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகம்  ஆகிய அலுவலகங்களிலும், தங்கு கடல் மீன்பிடித்தலை அனுமதிக்கக் கோரி  விசைப்படகு மீனவர்கள் மனு கொடுத்தனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 6வது நாளான  நேற்றும் விசைப்படகு மீனவர்கள்  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கடலுக்கு செல்லாத அவர்களது விசைப்படகுகள்  மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

Tags : Fisheries fishermen ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!