×

சாராயம் விற்றவர் அதிரடி கைது

சின்னசேலம், மார்ச் 11: சின்னசேலம் அருகே கல்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(52). இவர் தற்போது சின்னசேலம் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் வாசுதேவனூர், அம்மையகரம் பகுதியில் சாராயம் விற்பதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, பிரபாகரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தேடி வந்தனர். அப்போது வாசுதேவனூர் சுடுகாடு பகுதியில் லாரி டியூபில் சாராயம் வைத்து விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், பெரியசாமியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பெரியசாமி மீது ஏற்கனவே சாராயம் விற்றதாக வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED கூடுதல் வரி விதிக்க பரிந்துரை:...