×

புதுவை மாநில பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி, மார்ச் 11: பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில நிர்வாகிகளை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் ஆகியோரின் ஒப்புதலின்படி நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில துணை தலைவர்களாக தங்க.விக்ரமன், வி.செல்வம், சாய் ஜெ.சரவணகுமார், நளினி கணேஷ்பாபு, அருள்முருகன், ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர்களாக ஏம்பலம் செல்வம், மோகன்குமார், செயலாளர்களாக அகிலன், ரத்தினவேல், வி.நாகராஜ், ஜெயந்தி, சகுந்தலா, லதா, பொருளாளராக சங்கர் எம்எல்ஏ., மாநில அலுவலக செயலாளராக கவுரிசங்கர், இளைஞரணி தலைவராக கோவேந்தன், மகளிரணி தலைவியாக ஜெயலட்சுமி, எஸ்சி அணி தலைவராக ஆறுமுகம், விவசாய அணி தலைவராக புகழேந்தி, ஓபிசி அணி தலைவராக சிவக்குமார், சிறுபான்மையினர் அணி தலைவராக விக்டர் விஜயராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.

Tags : Puduvai ,state ,administrators ,BJP ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...