×

குண்டும் குழியுமாக காணப்படும் கலிதீர்த்தாள்குப்பம் தார்சாலை

திருபுவனை, மார்ச் 11: விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மதகடிப்பட்டு வழியாக கலிதீர்த்தாள்குப்பம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான்  சன்னியாசிக்குப்பம்  பகுதிக்கு பேருந்துகள் சென்று வருகின்றன, இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள தொழிற்சாலைக்கு 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சென்று வருகின்றனர்.
இவ்வளவு வாகன போக்குவரத்து அதிகமுள்ள கலிதீர்த்தாள்குப்பம் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலை பழுதடைந்து அதிக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இவ்வழியாக இரவு நேரங்களில் செல்வோர் குழியில் வாகனத்தை விட்டுவிடுகின்றனர். இதனால் அதிக அளவில் விபத்தும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டி
களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : pit ,
× RELATED நத்தத்தில் குண்டும், குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி