×

தென்காசி மாவட்ட உள்ளாட்சிகளில் வார்டு மறுவரையறையில் குளறுபடி

தென்காசி, மார்ச் 11:  தென்காசி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறையில் குளறுபடி நடந்துள்ளதாக கட்சியினர் புகார் தெரிவித்தனர். தென்காசி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையரும்,  தமிழ்நாடு மாநில மறுவரையரை ஆணையத்தின் தலைவருமான பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியன்,  பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊரகம்) ஆனந்தராஜ், (நகர்புறம்) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மந்திரா சலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் பேசிய பலரும் தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறு வரையறை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை சுட்டிக்காட்டினர். இன சுழற்சிமுறை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் வார்டு மறுவரையறை என்பது சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். குறைகளை மனுவாக கொடுக்குமாறு மறுவரையறை ஆணையர் கேட்டு கொண்டதையடுத்து பெரும்பாலானோர் மனுக்களாக கொடுத்தனர்.

Tags : Ward ,redevelopment ,district ,Tenkasi ,
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...