×

கீழசிவந்திபுரம் நாராயணசுவாமி தாங்கலில் மாசி பெருந்திருவிழா

விகேபுரம், மார்ச் 11:  விகேபுரம் அருகே உள்ள கீழசிவந்திபுரத்தில் உள்ள மன் நாராயணசுவாமி திருத்தாங்கலில் மாசி பெருந்திருவிழா 10 நாள்கள் நடந்தது. கீழசிவந்திபுரத்தில் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மன் நாராயணசுவாமி திருத்தாங்கல் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி, ஆவணி மாதங்களில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான மாசி பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் உகப்படிப்பு பணி விடைகள் நடந்து வந்தன. 8ம் திருநாளான வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் நாராயணசுவாமி எழுந்தருளி கலிவேட்டையாடினார். ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பாபநாசத்துக்கு சென்றார். அங்கிருந்து பக்தர்கள் சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் உச்சிபடிப்பு பணிவிடையும், அன்னதானமும் நடந்தது. மாலையில் உகப்படிப்பு பணிவிடைக்கு பின்னர் நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் சிவந்திபுரம், புலவன்பட்டி, வராகபுரம், அம்பலவாணபுரம், ஆறுமுகம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Mass Festival ,
× RELATED திருமயம் அருகே தைலமர...