×

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி வரச்சென்ற பட்டதாரி பெண் மாயம்


சேலம், மார்ச் 11: சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி வருவதாக கூறிச்சென்ற பட்டதாரி பெண் மாயமானார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி- பழனியம்மாள் தம்பதிகளின் மகள் தேவி (27). எம்பில் பட்டதாரி. இந்நிலையில் பழனியம்மாள்  காலில் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாளுக்கு உதவியாக மகள் தேவியும் உடனிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தேவியிடம் வந்து மருந்துகள் மாற்றித்தர வேண்டியது உள்ளது என கூறியுள்ளார். இதனால் தேவி, மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் மருந்து வாங்கி வருவதாக கூறி சென்ற தேவி, நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தேவி மாயமாகி உள்ளார். இதனால் யாராவது திட்டமிட்டு அவரை கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem Government Hospital ,
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி