×

இடைப்பாடியில் முலாம்பழம் அறுவடை தீவிரம்

இடைப்பாடி, மார்ச் 11: இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் முலாம்பழம் அறுவடையை விவசாயிகள் துவக்கி உள்ளனர். வெளிமாவட்டம், மாநில வியாபாரிகள் ஒரு கிலோ முலாம்பழத்தை ₹7க்கு வாங்கிச்செல்கின்றனர்.இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில், சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் அதிகளவில் முலாம்பழம் சாகுபடி செய்துள்ளனர். கோடை காலம் துவங்கியமதல் தர்பூசணியை போல முலாம்பழத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இடைப்பாடி பகுதியில் அறுவடை செய்யப்படும் முலாம் பழத்தை வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் நேரடியாக வந்தும் வாங்கிச்செல்கின்றனர்.ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை முலாம் பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ பழத்தை ₹10க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.தினமும் ஒரு டன் வரை முலாம்பழத்தை பறித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். 10 நாட்கள் வரை தொடர்ந்து விற்பனைக்கு அனுப்ப முடியும் எனவும், வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் ஒரு கிலோ முலாம்பழத்தை ₹7 வரை வாங்கிச்செல்வதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED குட்கா கடத்திய வாலிபர் கைது