×

ரயில் நிலையம் அருகே அபாய திரவக்கழிவு எரிப்பு

நெல்லை, மார்ச் 11: நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே அபாய திரவ கழிவு திடீரென சாலையில் எரிக்கப்பட்டது. அதில் இருந்து அபாய நச்சுப்புகை வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நெல்லை மாநகர பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை வீசுவது, குப்பைகளை சாலையோரங்களில் தீயிட்டு கொளுத்துவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி வளாகம் அருகே மர்ம நபர்கள் அபாய திரவம் உள்ளிட்ட குப்பைகளை குவித்து போட்டு தீவைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அந்த தீ அதிகளவில் பரவியதுடன் அதில் இருந்து அபாயகரமான கரும் நச்சுப்புகை வெளியேறியது. இந்த புகை சுற்றுவட்டாரபகுதி முழுவதும் தெரியும் அளவிற்கு பல பனைமர உயரத்திற்கு சென்றது. இந்த நச்சுப்புகையை அந்த வழியாக சென்றவர்கள் சுவாசிக்க நேர்ந்ததால் சிலர் மூச்சுதிணறலால் சிரமப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.
தகவலறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Tags : railway station ,
× RELATED சின்னசேலம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரம்