×

சீவலப்பேரி அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு விழா

நெல்லை, மார்ச் 11: பாளை அருகேயுள்ள சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். அடல் டிங்கரிங் லேபை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா குத்துவிளக்கேற்றினார். சிறப்பு விருந்தினர்களாக பாளை கூடுதல் தாசில்தார் பாலகிருஷ்ணன், மாவட்ட அறிவியல் மைய அதிகாரி குமார், எப்எக்ஸ் கல்லூரி கல்வியியல் ஆலோசகர் சிவாஞ்சலி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கடந்தாண்டு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள், பாடவாரியாக சிறப்பிடம் பெற்றவர்கள், 2018 சாரண சாரணிய ஆளுனர் விருது, தேசிய சைக்கிள் போலலே மூன்றாமிடம், எஸ்ஜிஎப்ஐ கடந்த வருட தேசிய கால்பந்து போட்டியில் கலந்து கொண்டவர்கள், சம்க்ர சிக்சான் புராஜெக்ட் இன்னோவோட்டிவ் போட்யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் பிரதாப் ரூபன் நன்றி கூறினார்.

Tags : Laboratory ,Sewalapperi Government School ,
× RELATED செங்கல்பட்டு அருகே உள்ள...