×

திருச்செங்கோடு நகராட்சிக்கு வரி செலுத்த தவறினால் நடவடிக்கை

திருச்செங்கோடு மார்ச் 11: திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் வெளியிட்டுள்ள அறிக்கை:  திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி, நகராட்சி கடைகளுக்கான வாடகை, தொழில் உரிம கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் நிலுவையின்றி உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். 2019-20 நிதியாண்டு முடிவடைய உள்ளதால் தீவிர வரிவசூல் மேற்கொள்ள நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் வரிவசூல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை செலுத்தாத குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு,  கடையை பூட்டி சீல் வைக்கப்படும். வரிகள் கட்ட தவறுபவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவற்றை தவிர்க்கும் வகையில் பொதுமக்களின் நன்மைக்காக விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகராட்சி கணினி வசூல் மையங்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரியினங்களை நிலுவையின்றி செலுத்தி, நகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tiruchengode Municipality ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு