×

எருமப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

சேந்தமங்கலம், மார்ச் 11: எருமப்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் கஸ்தூரிபட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பட்டுபத்தநாதன் தலைமை வகித்தார். வருதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வரவேற்றார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். இதில் எருமப்பட்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜன், துணை தலைவர் லோகநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலுசாமி, மாவட்ட கவுன்சிலர் தவமணி, சுகுமார் உட்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,meeting ,
× RELATED மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல்...