×

புதர்மண்டி, ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி மாயமாகும் ‘காயல்குடி ஆறு’ ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு: வடிநில கோட்ட அதிகாரிகள் அலட்சியம்


விருதுநகர், மார்ச் 11:ராஜபாளையத்திற்கு முன் துவங்கி திருவில்லிபுத்தூர் வரையிலான 15 கி.மீ தூரம் பாயும் காயல்குடி ஆறு முட்புதர்கள் மண்டி, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சுருங்கி வருகிறது. இதனை மீட்டெடுக்க வேண்டுமென 15 கிராம விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் வற்றாத ஜீவநதிகளும், ஆறும் இல்லாத நிலையில் பருவமழை காலங்களில் மட்டும் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மட்டுமே உள்ளன. மழைக்காலத்தில் ஓடும் ஆறுகளும் புதர்கள்மண்டி, ஆக்கிரமிப்பில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

பல ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகள், வணிகவளாகங்கள், அரசு கட்டிடங்கள் என ஆக்கிரமிப்பால் சுருங்கி கழிவுநீர் செல்லும் ஓடைகளாக காட்சி தருகின்றன. இதில் காயல்குடி ஆறு விதிவிலக்கல்ல. இதனால் விவசாயத்தில் முதன்மை பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. காயல்குடி ஆறு சம்பந்தபுரம், மேலப்பாட்டம் கரிசல்குளம், ராஜபாளையம், கொத்தன்குளம், பிள்ளையார்குளம், அச்சம் தவிர்த்தான் வருவாய் கிராமங்கள் வழியாக 15 கி.மீ தூரம் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடி நதிக்குடியில் முடிகிறது. காயல்குடி ஆறு ஓடும் 15 கி.மீ தூரத்தில் 15க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் உள்ளது.

காயல்குடி ஆற்றில் பொதுப்பணித்துறை மேல்வைப்பாறு வடிநில கோட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததால் மேடு தட்டி கருவேல மரங்களும், முட்புதர்களும் மண்டி கிடக்கின்றன. 200மீ அகலம் கொண்ட காயல்குடி ஆறு தற்போது ஆக்கிரமிப்புகளால் 20மீக்கும் குறைவாக சுருங்கி கிடக்கிறது. ஆற்றின் இருபுற நிலங்களும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி விட்டது.  காயல்குடி ஆற்றில் முதல்கட்டமாக சீமைக்கருவேல மர முட்புதர்களை அகற்றி கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாக வைத்து வரும் கோரிக்கைக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. பொதுப்பணித்துறையும், வருவாய்த்துறையும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் கர்ணன் கூறுகையில், ‘காயல்குடி ஆற்றை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். காயல்குடி ஆற்றின் எல்லையை கற்கள் நட்டு வரையறை செய்யக்கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. புதர்மண்டி கிடக்கும் ஆற்றை ஆழப்படுத்தி தூர்வார கலெக்டர் உத்தரவிட வேண்டும். காயல்குடி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வளம் பெறும்’ என்றார். வெங்கடாசலபதி, பெண் காவலர் கணபதி ஆகியோர் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : paddy fields ,river ,Kayalgudi ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...