×

மதுரையில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 11: மதுரையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியம் சம்பந்தமான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் (முப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்) மற்றும் சார்ந்தோர்களின் ஓய்வூதியம் சம்பந்தமான குறைகளை களைவதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், ஏப்ரல் மாதம் 23 மற்றும் 24ம் தேதி ஆகிய இரு நாட்கள் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்டரி வளாக ஆடிடோரியத்தில் நடைபெறுகிறது. ஆவண காப்பக அதிகாரிகளால் நடத்தப்படும் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டு, ஓய்வூதிய குறைபாடுகளை சரிசெய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா தெரிவித்துள்ளார்.


Tags : meeting ,Madurai ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்