×

பையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 11: பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தர்மபுரி மண்டல மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவிட்19 வைரஸ் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை விளக்க நாடகம்,கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டணம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஹரிராம் தலைமை வகித்தார். கள விளம்பர உதவி அலுவலர் வீரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், வட்டார மருத்துவ ஆய்வாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வட்டார மருத்துவ அலுவலர் பேசியதாவது: கோவிட்19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மக்கள் தற்காப்பு நடவடிக்கை முறைகளை கையாள வேண்டும். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏற்கனவே பல்வேறு வைரஸ்களை கண்டு உள்ளோம். பூமி வெப்பமடைந்து வருவதால் வைரஸ்கள் அனைத்தும் கூடுதல் பலம் பெற்று வருகிறது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாத்து நோய் தடுப்பு முறைகளை பின்பற்றிட வேண்டும். பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கழிவறை பயன்படுத்துதல், நோய் தடுப்பு உள்ளிட்டவை மூலம் வைரஸ் நோய்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கைக் கழுவுதல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கிராமபுறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த விழிப்புணர்வு பேரணியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paior Panchayat Union School ,
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா