×

ஓசூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஓசூர்,மார்ச் 11: ஓசூரில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஓசூர் ஹோஸ்டிய அலுவலகத்தில் நேற்று கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல்  தடுப்பது  குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில், நடந்த முகாமிற்கு மாவட்ட தொழில் மைய மேலாளர் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.முகாமிற்கு ஹோஸ்டியா  தலைவர் வேல்முருகன்  தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் அலுவலர் முத்துமாரியப்பன், டாக்டர் ரங்கராஜ்குமார், டாக்டர் சுகன்யா, மோகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.அப்போது கொரோனா வராமல் தடுப்பது குறித்து விளக்கினார். முகாமில் மருத்துவர்கள் கூறியயடி தொழிலாளர்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், இது குறித்து குடும்ப உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும், யாருக்காவது காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில் ஹோஸ்டியா  செயலாளர் வடிவேல், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் விஜயகாந்த், இணைச்செயலாளர் இஸ்மாயில், குமார், பன்னீர்செல்வம், உள்ளி–்ட்ட பலர் கலந்து கொண்டனர்.ஹோஸ்டியா  முன்னாள் தலைவர் சம்பத்  நன்றி கூறினார்.

Tags : Corona Antivirus Awareness Camp ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை...