×

பேருந்து மோதி விவசாயி பலி

தர்மபுரி, மார்ச் 11: மொரப்பூர் அருகே எம்.வேலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை(57), விவசாயி. இவர், நேற்று முன்தினம் மொரப்பூரில் இருந்த வேலாம்பட்டிக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே அரசு டவுன் பேருந்து அப்பாதுரை வந்த டூவீலர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பாதுரை நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...