×

வருசநாடு அருகே மலை கிராமங்களில் திடீர் ஆய்வு

வருசநாடு, மார்ச் 11: வருசநாடு அருகே மலைக்கிராம பகுதிகளை பெரியகுளம் சார் ஆட்சியர் ஆய்வு செய்தார். கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை ஊராட்சிகளுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வன உரிமைகுழு ஏற்கனவே ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வன உரிமைகுழு எவ்வாறு செயல்படுகிறது, இதற்கான அதிகாரம் என்ன, மலைக்கிராமத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் எவ்வாறு உள்ளது, அவர்கள் வாழும் பகுதி எவ்வித பொருளாதாரத்தை கொண்டுள்ளது என்பது பற்றி ஒவ்வொரு கிராமம் கிராமமாக பெரியகுளம் சார்ஆட்சியர் சினேகா ஆய்வு செய்து குறைகள் பற்றி பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதில் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரன், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம அலுவலர்கள் அன்பழகன், சசிக்குமார், தும்மக்குண்டு ஊராட்சி துணைத்தலைவர் செல்வம், ஊராட்சி செயலாளர் சின்னசாமி, மேகமலை ஊராட்சி மன்றதலைவர் பால்கண்ணன், சமூகஆர்வலர் சின்னன் மற்றும் வன உரிமைகுழு உறுப்பினர்கள் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கிராம முக்கியஸ்தர்கள் லட்சாதிபதி, குணசேகரன், ஜெயபால், வேல்மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : mountain villages ,Varusanad ,
× RELATED கோடை மழையால் மரத்திலேயே வெடித்து...