×

சுருளிப்பட்டி ஊராட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா

கம்பம், மார்ச் 11: சுருளிப்பட்டி ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உலக மகளிர் தினம், வளரிளம் பெண்கள் பராமரிப்பு, ஊட்டச் சத்து திருவிழா, போஷான் அபியான், போஷன் பக்வாடா, கொரானோ வைரஸ் விழிப்புணர்வு, கை கழுவும் பயிற்சிகள் போன்றவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து உணவுகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள், விட்டமின் டி விழிப்புணர்வு, அயோடின் விழிப்புணர்வு போன்றவை பற்றி காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் சிராஜ்தீன் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சூர்யகுமார், கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள், ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி கலந்து கொண்டனர்.

Tags : Nutrition Awareness Ceremony ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...