×

டிரைவர் மர்மச்சாவு

தேவதானப்பட்டி, மார்ச் 11: தேவதானப்பட்டியில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தெய்வம் மகன் ஆட்டோ டிரைவர் ராஜவர்மன்(25). இவர் அரிசிக் கடை பஸ் ஸ்டாப்பில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேவதானப்பட்டி அருகே தனியார் கல்குவாரி அருகே சாலை ஓரத்தில் படுத்த நிலையில் கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜவர்மன் உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜவர்மன் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Driver Marmachau ,
× RELATED தேவிபட்டினத்தில் டிராக்டர் டிரைவர் மர்மச்சாவு?