×

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கம்பம், மார்ச் 11: கம்பத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கம்பத்தில் கடந்த மாதம் 11ம் தேதி முதல் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டத்தை தியாகி பீர்முகமது பாவலர் படிப்பகம் முன்புள்ள வாவா திடலில் தொடங்கினர். கடந்த 27ம் தேதி முதல் முகைதீன் பள்ளிவாசல் முன்புற சந்தில் உள்ள ஷாஹீன் பாக் திடலில் இரண்டாவது குழுவாக போராட்டக்காரர்கள் கடந்த 13 நாட்களாக உண்டு, உறங்கி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவிலுள்ள அனைத்து எதிர்க்காட்சிகளையும் ஒன்று சேர்த்த பெருமை மோடியையே சாரும். மோடி இந்தியாவில் இந்து சம்ராஜ்யம் அமைக்கமாட்டார். பார்ப்பனிய சாம்ராஜ்யமே அமைப்பார். மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

Tags :
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...