×

சின்னமனூரில் சாலை பணிக்காக விளைநிலங்கள் அழிப்பு உணவு உற்பத்தி குறைந்தது

சின்னமனூர், மார்ச் 11: சின்னமனூரில் புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்கள் அழிக்கப்பட்டதால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை குறுகிய சாலையாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வந்தது. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட உயிர்ப்பலிகளும் நடந்து வந்தன. இதனையடுத்து திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தப்பட்டது. சர்வே செய்து தொடர்ந்து புறவழிச் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ரூ.280.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

Tags : farmland ,Chinnamanur ,
× RELATED பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் 55 அடி...