×

ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு? விவசாய தொழிலாளர் போராட்டம்

திண்டுக்கல், மார்ச் 11: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல்லில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலையை 250 நாளாக உயர்த்தி, சம்பளம் ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். தற்போதைய சம்பளம் ரூ.229ஐ முழுமையாக வழங்க வேண்டும். சமூக தணிக்கை அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு இத் திட்டத்தில் 3 கோடியே 92 லட்சத்து 848 ரூபாய் மோசடி குறித்தும், இதே ஆண்டில் 44 கோடியே 89 லட்சத்து 10 ஆயிரத்து 260 ரூபாய் முறையற்ற வகையில் செலவு செய்தது குறித்தும், 2018-2019ம் ஆண்டு இத்திட்டத்தில் 2 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரத்து 145 ரூபாய் மோசடி குறித்தும், இதே ஆண்டில் 52 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரத்து 424 ரூபாயும் முறையற்ற வகையில் செலவு குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் 10 வாரங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகளை உடனடியாக வழங்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் கண்ணன் மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக சங்க ஒன்றிய தலைவர் அம்மையப்பன் நன்றி கூறினார். போராட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags : Rural Employment Guarantee Scheme ,
× RELATED தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்...