×

ஸ் படியில் தொங்கிக் கொண்டு மாணவர்கள் ஆபத்தான பயணம்

வத்தலக்குண்டு, மார்ச் 11: வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில் பள்ளி, கல்லூரி துவங்கும் நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் ஆபத்தான முறையில் பயணம் செல்கின்றனர். வத்தலக்குண்டுவிலிருந்து நிலக்கோட்டை செல்வதற்கு காலை கல்லூரி, பள்ளி துவங்கும் நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். பஸ்ஸின் குறுக்கே திடீரென்று சைக்கிளோ, மோட்டார் சைக்கிளோ வந்துவிட்டால் டிரைவர் திடீரென்று பிரேக் போடும்போது படியில் செல்பவர்கள் தவறி விழுந்து உயிர் இழக்கும் அபாயம் நிலவுகிறது.

வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில் 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. வேகத்தடைகள் மீது பஸ் செல்லும்போது கூட படியில் தொங்குபவர்கள் கீழே விழும் வாய்ப்புள்ளது. காவல்துறையினர் படியில் தொங்கி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தினர் காலை நேரத்தில் கல்லூரி, பள்ளி துவங்கும் நேரத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க முன்வர வேண்டும் என வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர் வக்கீல் ராஜா கூறுகையில், ‘நான் தினசரி நிலக்கோட்டை நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறேன். பள்ளி மாணவர்களும், சில நேரங்களில் கல்லூரி மாணவிகளும் படிகளில் நின்று பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலை மாற அரசு போக்குவரத்து கழகத்தினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...