×

கல்லாற்றுபாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

கடத்தூர், மார்ச் 11: கடத்தூர் அருகே கல்லாற்றுபாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடத்தூர் அடுத்த தா.அய்யம்பட்டி- அரூர் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட கல்லாற்று பாலத்தில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ₹3 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் தர்மபுரி, கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் மைய பகுதியாக உள்ளது. பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் இரவு ேநரங்களில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED மேம்பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி