×

அரூர், தீர்த்தமலை பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த வேண்டும்

அரூர், மார்ச் 11: அரூர், தீர்த்தமலை பகுதிக்கு 108ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் வட்டத்தில் ஐந்து 108 ஆம்புலன்ஸ்களும், ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சேவையாற்றி வருகின்றன. அரூர் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சுமார் 50க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். அரூர் பெருநகரமாக உள்ளதால், அரூரில் விபத்து மற்றும் அவசர நோயாளிகளை காப்பாற்றுவதற்கு 108 ஆம்புலன்ஸ் வர வேண்டுமென்றால், சின்னான் குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்துதான் வரவேண்டும். மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரூரில் ஒரு 108 ஆம்புலன்ஸ் சேவையாற்றி வருகின்றது அந்த 108 ஆம்புலன்ஸ் அரூர் அரசு மருத்துவமனையில் இருந்து, உயர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரூர் அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உயர் சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. எனவே அரூர் நகரத்திற்கு நிரந்தரமாக கூடுதலாக, ஒரு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும். தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாளொன்றுக்கு சுமார் 300புறநோயாளிகளும், சுமார் 25 முதல் 50 உள் நோயாளிகளும் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தீர்த்தமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மாதத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வருகின்றன. அதற்கு 108 ஆம்புலன்ஸ் வரவேண்டுமென்றால், சின்ன குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் வரவேண்டும் அல்லது கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, சுமார் 20கிலோ மீட்டர்  வரவேண்டும். தீர்த்தமலையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சையில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாமல், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே அரூர், தீர்த்தமலை பகுதிக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Arthur ,Theerthamalai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...