×

மகளிர் குழு செயல்பாட்டில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் கலெக்டர் பேச்சு

சிவகங்கை, மார்ச் 11:  சிவகங்கை மாவட்டம் மகளிர் குழு செயல்பாட்டில் முதலிடம் வகிக்கிறது என கலெக்டர் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை 9ஆயிரம் மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டு இக்குழுக்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வங்கிகள் ஒருங்கிணைந்து கடனுதவிகள் வழங்கி வருகின்றன. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் சுயஉதவிக் குழுவின் முன்னேற்றத்தில் முதன்மை இடத்தை பிடித்து அதற்குறிய விருதையும் மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளது.

சுயஉதவிக் குழுக்கள் முன்னேற்றத்திற்கு தேவையான தொழிற்பயிற்சி மற்றும் வங்கி கடனும் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்பெண்கள் முன்னேற்றம் பெற அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கிராமப்பகுதியிலுள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவை பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தால் உடனடியாக தகவல் தெரிவித்தால் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.

சுயஉதவிக் குழு பெண்கள் பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, குழுப்பாடல், சுலோகம் போன்றவற்றில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பழனிஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், சிவகங்கை ஆர்டிஓ(பொ) சிந்து மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா மற்றும் அரசு அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Tags : Sivaganga District ,collector ,women ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...