×

பின்னலாடை நிறுவனங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வடமாநில தொழிலாளர்கள் உற்சாகம்

திருப்பூர், மார்ச் 11:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.  இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் உள்ள பொது மக்கள் ஹோலி பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், மணிப்பூர், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களை ேசர்ந்த லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். கருமத்தம்பட்டி அரசூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில், ஒடிசா தொழிலாளர் 700 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.  இதில் ஓவிய போட்டி, பாரம்பரிய நடனம், மெகந்தி, 100 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடி தூவியும், தண்ணீர் அடித்து விளையாடியும் மகிழ்ந்தனர். ஒடிசா தொழிலாளர் சேவைமைய மேலாளர் ராமசாமி பரிசு வழங்கி, பேசினார்.

Tags : Holi festival celebration ,backcountry companies ,Northwest ,
× RELATED டெல்லி குடியிருப்புப் பகுதியில்...