×

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தொண்டி, மார்ச் 11: தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ராநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் நம்புதாளை குறுவளமையத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 11 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மேற்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் பிரகாஷ் கண்ணன், கேகேபட்டினம் பள்ளி தலைமை ஆசிரியை ஹேமா மாலினி, சிறப்பாசிரியர் அலெக்ஸ் பாண்டியன் பயிற்சி அளித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன் பார்வையிட்டார். பயிற்சியில் ஆர்டிஇ சட்டம் குறித்தும், பள்ளி மேலாண்மை குழு பணிகள், குழந்தைகள் உரிமை, பள்ளி சுகாதாரம், கல்வியில் புதுமை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. சுகாதாரம் என்ற தலைப்பின் கீழ் கை கழுவது எவ்வாறு என்ற செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Meeting ,School Management Team ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...