×

கமுதி அருகே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஊர்வலம்


கமுதி, மார்ச் 11: கமுதி அருகே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. கமுதி அருகே பேரையூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குபேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன் வரவேற்று பேசினார். ஊராட்சி துணைத் தலைவர் அசினா பேகம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக்கை தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும். தொடர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளோரை கவனமாக சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : Coronavirus Awareness Procession ,Kamuthi ,
× RELATED முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது