×

ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனைக்கு டெங்கு கண்டறியும் மெஷின் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 11: ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் செல் கவுண்டிங் மெஷின் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை உள்ளது. படுக்கை வசதி கொண்ட உள்நோயாளிகள் பிரிவுடன் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் தினமும் 100க்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஏராளமான சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சிகிச்சைக்கு வரும் நிலையில், இங்கு காய்ச்ல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளதா? என கண்டறிய இன்னும் இங்கு உரிய கருவி இல்லை. கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்வதற்கான டெங்கு கண்டறிய செல் கவுண்டிங் மெஷின் இல்லை.

இதனால் ரத்த மாதிரி எடுத்து ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பரிசோதனை முடிவு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. முடிவு வந்தபின் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் தேவையற்ற செலவும் உடனடி பரிசோதனை முடிவு தெரியாமல் நாட்கள் கடந்து விடுவதால், உயிர் பலியும் ஏற்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இம்மருத்துவமனையில் முதல் உதவிக்கான சிகிச்சை செய்து விட்டு தொடர் சிகிச்சை என்றால் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுவும் டெங்கு காய்ச்சல் என்றால் அதற்கான செல் கவுண்டிங் மெஷின் இல்லை என்று கூறிவிடுகின்றனர். இந்த பகுதி அதிக அளவில் ஏழை விவசாய தொழிலாளர் வசிக்கும் பகுதியாகும். அதிக பணம் செலவழித்து தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. எனவே இந்த மருத்துவமனைக்கு டெங்கு கண்டறியும் செல் கவுண்டிங் மெஷின் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : RS Mangalam Government Hospital ,
× RELATED மீஞ்சூர் பேரூராட்சிக்கு துணை மின்...