×

இரவு,பகல் வேளையில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 11: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகளான ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றது. இதனால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகிறது. ஆடு, மாடுகளை வளர்பவர்கள் அதனை சரியாக பராமரித்து வீடுகளில் கட்டாமல் விட்டு விடுகின்றனர். இவைகள் இரவு, பகல் பாராமல் ரோடுகளில் படுத்து இருப்பதும்,குறுக்கு நெடுக்காக ஓடுவதாலும் டூவிலர்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

கால்நடைகள் சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாய் ஒடுவதால் விபத்துக்களில் பலர் கால் போய், கை போய் அல்லல்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் உள்ள மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் தின்று நாசப்படுத்தி விடுகின்றது. எனவே இதற்கு உள்ளாட்சிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளால் நடக்க கூடிய வாகன விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,roads ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்