×

100 நாள் வேலை வழங்கக்கோரி தொடர் முழக்க போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

மதுரை, மார்ச் 11: 100 நாள் வேலை வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தில் 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப ரூ.600 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியத்தை வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுரலகத்தில் மனு கொடுக்கும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக அண்ணா பஸ்நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அலுவலக வாசலில் கோரிக்கைையை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில துணைத்தலைவர் வசந்தமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் உமாமகேஷ்வரன், செயலாளர் பாண்டியன், துணை செயலாளர் பாலுச்சாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Tags : poster protest ,office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...