×

பட்டிவீரன்பட்டி அருகே விழிப்புணர்வுக்காக ஹெல்மெட் அணிந்து டிராக்டர் ஓட்டும் டிரைவர்

பட்டிவீரன்பட்டி, மார்ச் 11: பட்டிவீரன்பட்டி அருகே விழிப்புணர்வுக்காக ஹெல்மெட் அணிந்து டிரைவர் டிராக்டர் ஓட்டி வருகிறார். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவைச் சேர்ந்தவர் காட்டுராஜா (40). இவர் டிராக்டர் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சித்தரேவு ஊராட்சியில் உள்ள குப்பை அள்ளும் டிராக்டரில் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார். இவர் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும் என்பதற்காகவும், டிராக்டர் மேற்கூரையின்றி திறந்த வெளியாக உள்ளதால் வெயில் அடிக்காமல் இருப்பதற்காகவும் ஹெல்மெட் அணிந்து டிராக்டர் ஓட்டி வருகிறார். இதுபற்றி காட்டுராஜா கூறியதாவது, நான் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் விழிப்புணர்விற்காக ஹெல்மெட் அணிந்து டிராக்டர் ஓட்டுவதாக தெரிவித்தார்.

Tags : Pativeeranpatti ,
× RELATED மனைவியுடன் தொடர்பு வைத்ததால்...