×

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


பழநி, மார்ச் 11: பழநி அருகே தொப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. டிஎஸ்பி விவேகானந்தன் தலைமை வகித்தார். வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுகன்யா வரவேற்றுப் பேசினார். சிவாலயா யோகா மையத்தின் நிறுவனர் சிவக்குமார் மனம் அமைதி மற்றும தியானம் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தார். முகாமில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவும், பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படும் தொந்தரவுகள், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள், சட்டங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள், காவலன் செயலியை பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி முகாமில் எஸ்ஐக்கள் பஞ்சலட்சுமி, ஈஸ்வரி, ஜெயபாண்டி உள்ளிட்ட ஆசிரியைகள், ஆசிரியர் பயிற்றுநர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : School Safety Awareness Camp ,
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்