×

காரணாம்பாளையம் அணையின் ஆழமான பகுதியில் தடுப்பு வேலி

மொடக்குறிச்சி, மார்ச் 11: காரணாம்பாளையம் அணைக்கட்டிற்கு குளிக்க வருபவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று குளிப்பதால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க அப்பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே காரணாம்பாளையம் அணைக்கட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் - நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே செல்லும் காவிரி ஆற்றில் இந்த அணைக்கட்டு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளித்து செல்கின்றனர்.மேலும் இங்கு பிடிக்கப்படும் மீனை விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் காரணாம்பாளையம் அணைக்கட்டிற்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதிக்குச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
இதில் நண்பர்களுடன் வருபவர்களும், குடிமகன்களும் ஆழமான பகுதிக்குச் சென்று விடுவதால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இந்த உயிரிழப்பை தடுக்கும் வகையில் மலையம்பாளையம் போலீசார் நேற்று ஆழமான பகுதிக்கு செல்லும் பாதையை தடுப்பு வேலி அமைத்துள்ளனர். மேலும் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டியை முகப்பில் வைத்துள்ளனர்.

Tags : dam ,Karatampalayam ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...