×

35 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியது வெயில் தாக்கம் அதிகரிப்பு

கோவை, மார்ச் 11:  கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருந்த வெப்ப நிலை தற்போது 35 டிகிரி செல்சியஸ் அளவை எட்டி விட்டது.
 அன்னூர், மதுக்கரை, சூலூர், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் மதிய நேர வெப்ப நிலை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் வாட்டுகிறது.
காற்றின் ஈரப்பதம் 51.9 செ.மீ. அளவிற்கும், மண்ணின் ஈரப்பதம் 30.9 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் இருக்கிறது.தொடர்ந்து வறண்ட வானிலையும், வெயில் தாக்கமும் அதிகமாக இருக்கும். இலைகளின் உதிரும் தன்மை அதிகரிக்கும். 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என வேளாண் வானிலை மையம் அறிவித்துள்ளது. வறட்சி,  வெயில் தாக்கத்தால் வேளாண் பயிர் சாகுபடி குறைந்து வருகிறது. வறட்சியை தாங்கும் பயிர்களை நீர் இருப்பை பொருத்து சாகுபடி செய்யவேண்டும். தென்னை மரங்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. சென்னை மரங்கள் வறட்சியில் காய்ந்து போகாமல் இருக்க, மரத்தின் அடிப்பகுதியில் தென்னை நார் போன்ற நீர் உறிஞ்சும் பொருட்களை குவித்து அதில் நீர் ஊற்றி போதுமான அளவு ஈரப்பதத்தை ஏற்படுத்தவேண்டும் என வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்