×

கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

கோவை, மார்ச் 11:  கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கல்லூரி முதல்வர்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமை வரும் 12ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் கொேரானா விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில், பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன், என்.எஸ்.எஸ். அதிகாரி செந்தில்குமார், சுகன்யா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், டாக்டர் ராஜேஸ்வரி கலந்துகொண்டு மாணவிகளுக்கு கைகளை கழுவும் முறைகள் குறித்தும், தினமும் 13 முறை கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், கொேரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் முறை குறித்து விளக்கம் அளித்தார். இந்த விழிப்புணர்வு முகாம் இன்றும் நாளையும் நடக்கிறது.

Tags : Corona Awareness Camp ,Government Polytechnic College for Women ,
× RELATED புதுச்சத்திரத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்