×

ெதரு விளக்கு இல்லாததால் இருட்டில் தவிக்கும் காவலர் குடும்பங்கள்

சூலூர், மார்ச் 11: சூலூர் நிலையத்துடன் காவல்துறையின் மோப்ப நாய் பிரிவும் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் குடியிருப்பும் உள்ளது. இதன் அருகே குழந்தைகள் விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு வழக்கு தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மைதானம் மற்றும் காலி இடத்தில் அடர்வனம் அமைப்பதாக கூறி கார், லாரி போன்ற வாகனங்கள் அனைத்தும் மோப்ப நாய் பிரிவு அருகில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் விளையாட்டு மைதானம் முழுவதும் மரம் நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டு மாதக்கணக்கில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் காவலர் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் கும்மிருட்டாக உள்ளது. அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் பாம்புகள் அதிகளவில் அருகில் உள்ள மோப்ப நாய் பிரிவு, பத்திர பதிவாளர் அலுவலகம் போன்ற இடங்களில் சர்வ சாதாரணமாக உலா வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் விளையாட்டு மைதானம், தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என்று காவலர் குடியிருப்பினர் தெரிவித்தனர்.

Tags : Guard families ,
× RELATED எங்களை யார் பார்ப்பார்கள்? ஊரடங்கு...