×

உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா, காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை, மார்ச் 11:மகளிர் தினத்தையொட்டி சீஷா, காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட்டது.கோவை, காருண்யா நகர் சீஷா மருத்துவமனையில் காருண்யா பல்கலைக்கழகம், கோவை மெர்டியன் ரோட்டரி சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில் நடந்த முகாமிற்கு டாக்டர் பால்தினகரன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் எலைஜா பிளசிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், மெர்டியன் ரோட்டரி தலைவர் சதீஷ்குமார், சீஷா செயல் அதிகாரி சாமுவேல் தாமஸ், மத்வராயபுரம் ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.  இதில் காருண்யா பல்கலைக்கழக மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை, பல் மருத்துவம், மூட்டு சிகிச்சை, கண் மருத்துவம், பெண், குழந்தைகள் நலம், சர்க்கரை பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் நரசிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிருஷ்ணராஜுக்கு செயற்கைகால் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சீஷா மருத்துவர்கள், ஊழியர்கள், காருண்யா பல்கலைக்கழக இளஞ் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Free Medical Camp ,Sesha ,Karunya University ,World Women's Day ,
× RELATED மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்