×

வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல் மாசிமக விழாவையொட்டி பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்

கும்பகோணம், மார்ச் 10:
மாசி மகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் 6 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது 5 நாட்கள் கோயிலுக்குள்ளே உள்புறப்பாடு நடைபெறும். இறுதி நாளான மாசி மகத்தன்று கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.இதையொட்டி நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்பகோணம் அடுத்த ஆடுதுறை கஞ்சனூரில் நவக்கிரக கோயில்களில் சுக்கிர தலமான  அக்னீஸ்வர கோயிலில் மாசிமக பெருவிழா நடந்தது. மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இதையடுத்து வடகாவிரி கரையில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அபபோது சின்னப்பெருமாள் (எ) தீர்த்தபேரருக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

Tags : traders ,union meeting ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...