×

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

கும்பகோணம், மார்ச் 10: கும்பகோணத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலக திறப்பு விழா மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.பேரமைப்பு சோழ மண்டல தலைவர் செந்தில்நாதன், சீமாட்டி குழும மேலாண்மை இயக்குநர் முகமது ஜியாவுதீன், அரசு குழுமத்தின் சேர்மன் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். அலுவலகத்தைதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்.கூட்டத்தில் பாரம்பரிய, கலாசார, தொன்மைமிக்க கோயில் மாநகர் கும்பகோணம் சோழர்கள் காலத்தில் தலைநகரமாக திகழ்ந்த பெருமை மிக்கது. தற்போதும் தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் மாவட்ட அளவிலான தலைமை அலுவலகம் கும்பகோணத்தில் இயங்கி வருகிறது. எனேவ முன்னுரிமை அடிப்படையில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உள்ளாட்சி வரிவிதிப்புகளில் குப்பை வரி என்ற ஒன்றை புதிதாக ஏற்படுத்தி வரைமுறையின்றி கடுமையான கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குப்பை வரி கட்டணத்தை உயர்த்தி வாங்கும் நடைமுறைய அரசு உடனே கைவிட வேண்டும்.

ஊரக மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் சாலை அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலையின் சம அளவுக்கு அதிகமாக உயரமான சாலைகளை அமைக்கக்கூடாது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சாலைகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் சேர்மன் பாலசுப்பிரமணியன், ராயா குழும சேர்மன் கோவிந்தராஜன், பெரியசாமி மூப்பனார் குழும மேலாண்மை இயக்குனர் பாக்கியநாதன், காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் செளமியநாராயணன், குடிநீர், குளிர்பான வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் சந்திரபாபு பங்கேற்றனர். கூட்டமைப்பு பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

Tags : Kumbakonam ,district ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...