×

புறம்போக்கு, கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, மார்ச் 10: பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவதை கண்டிப்பது.

உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தர ஒதுக்கப்படும் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி முடித்து வைத்தார்.இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி பன்னீர்செல்வம், சேதுபாவாசத்திரம் சின்னத்தம்பி, முருகேசன், சீதா, பாலு, பெத்தையன், ராமமூர்த்தி, சந்திரன், பாரதி நடராஜன் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,residents ,lands ,Temple ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்