×

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

பொன்னமராவதி, மார்ச்10: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா வரும் 15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்று. இந்த கோயில் பங்குனித்திருவிழா மிகச்சிறப்பு வாய்ந்தது. வரும் 15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் பங்குனித்திருவிழா தொடங்குகிறது. மறுநாள் 16ம் தேதி அக்கினிப்பால்குட விழா நடைபெறுகின்றது.
வரும் 22ம்தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டு தினசரி மண்டகப்படி நடக்கும். இதன் பின்னர் வரும் ஏப்ரல் 5ம் தேதி பொங்கல் விழாவும், ஏப்ரல் 6ம் தேதி நாடுசெலுத்துதல் திருவிழாவும் நடக்கின்றது. கோயிலின் பங்குனித்திருவிழாவில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், செயல்அலுவலர் வைரவன் மற்றும் கோயில் பூஜகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Muthumariyamman temple ,
× RELATED புதுக்கோட்டை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ரத ஊர்வலம்