×

திருமயம்- ெசன்னைக்கு அரசு சொகுசு பஸ் இயக்கம்

திருமயம்,மார்ச்10: தினகரன் செய்தி எதிரொலியாக திருமயத்தில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பஸ் இயக்கப்பட்டது. இதனை மக்கள் வழியனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் சென்னைக்கு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள விடுத்த கோரிக்கையை அடுத்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பயணிகளை காரணம் காட்டி அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் பல முறை செய்தி வெளி வந்தது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் திருமயம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுதிருமயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பஸ் இயக்க ஒப்புக்கொண்டனர். இதனை ஒரு விழாவாக கொண்டாடும் வகையில் திருமயம் ஊராட்சி, மற்றும் மக்கள் சார்பில் முதல் நாள் பஸ் இயக்கத்தின் போது பஸ்சுக்கு மாலை,ஓட்டுனர், நடத்துனர்கள் கவுரவிக்கப்பட்டு பஸ் இயக்கப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு திருமயத்தில் இருந்து அரசு சொகுசு பஸ் இயக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் அரசு பஸ்சை திருமயம் சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags : State Luxury Bus Movement ,Thirumayam ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...