×

எண்ணெய்வித்து பயிர்களில் களை மேலாண்மை

புதுக்கோட்டை, மார்ச் 10: எண்ணெய்வித்து பயிர்களில் களை மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித் து  வேளாண் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களைச்செடிகள் பயிர்களுடன் வெளிச்சம், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்காக போட்டியிடுவதுடன் விளைச்சலை பெருமளவு பாதிக்கின்றன. மேலும் பல்வேறு வகையான பூச்சிநோய் காரணிகளுக்கு மாற்று இருப்பிடமாகவும், விளைப்பொருட்களின் தரம் மற்றும் விளைச்சல் பெருமளவில் பாதிக்கவும் காரணமாகின்றன.இதன் காரணமாக பயிர் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு இழப்பும், உழவு தொழிலுக்கு இடையூறாகவும், வேலைத்திறனை குறைப்பதால் வேலையாட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன் பல்வேறு உள்ளீடு செலவுகளையும் அதிகப்படுத்துவதால் விவசாயிகளின் வருமானத்தை குறைக்கும் காரணியாக களைச்செடிகள் காணப்படுகிறது. அதிக இடைவெளிகளில் பயிர்களை சாகுபடி செய்வதாலும், தேவைக்கு அதிகமான அளவுக்கு நீர் மற்றும் வேளாண் இடுபொருட்களை உபயோகிப்பதாலும், களை செடிகள் அதிகமாக வளர்கிறது.

களை செடிகளை முற்றிலும் அழிக்காமல் அவற்றின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை தடுத்து பயிர் விளைச்சலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வழி செய்வதே நோக்கமாகும். அதாவது கொத்துதல், கைகளை எடுத்தல், அதிக நீர்ப்பாசனம் அளித்தல், கோடை உழவு, சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், சரியான முறையில் நிலம் மற்றும் விதை படுக்கையை தயாரித்தல், ஊடுபயிர் மற்றும் பயிர் ஊட்டச்சத்து மேலாண்மையை மேற்கொள்ளுதல், இயந்திர மற்றும் களை கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் களை செடிகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Oilseed Crops ,
× RELATED எண்ணெய் வித்து பயிர்களில் பூச்சி...